ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ட்ரோன்கள் என்பவற்றை தமது வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
மோதல் ஆரம்பமான நாள் முதல் இதுவரை 334 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ட்ரோன்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக இரண்டு இராணுவத்தினர் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, 158 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது






