Date:

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானியின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என்று ஈரானின் புதிய அதியுயர் தலைவர் முஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

லாரிஜானியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வமான செய்தியில், “சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு, இந்த தியாகிகளைக் கொன்ற குற்றவாளிகள் விரைவில் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தனது தந்தை அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு பதவியேற்ற மோஜ்தபா, லாரிஜானி மரணத்திற்குப் பிறகு விடுத்துள்ள முதல் நேரடி எதிர்வினை இதுவாகும்.

 

அலி லாரிஜானி ஈரானின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் ஒரு தூணாக விளங்கியவர் என்றும், அவரது படுகொலை இஸ்லாமிய எதிரிகளின் வெறுப்பையே காட்டுகிறது என்றும் முஜ்தபா புகழாரம் சூட்டியுள்ளார்.

 

லாரிஜானி தனது மகனுடன் கொல்லப்பட்ட சம்பவம் ஈரானிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, “குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என்று மோஜ்தபா உறுதியளித்துள்ளதால், இஸ்‌ரேல் மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஈரான் தனது ஏவுகணைகள் மூலம் இஸ்‌ரேலின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வரை பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமான இடத்தில் இருந்து நாட்டை வழிநடத்தி வரும் மோஜ்தபா கமேனி, ஈரானின் ராணுவக் கட்டமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

லாரிஜானியின் மறைவு ஈரானின் அதிகார மையத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மோஜ்தபாவின் இந்த ‘இரத்தத்திற்குப் பழிவாங்கும்’ சபதம் ஈரானிய இராணுவத்தினரிடையே புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதேவேளையில், இஸ்ரேலிய இராணுவம் மோஜ்தபா கமேனியையும் தங்களது அடுத்த இலக்காக அறிவித்துத் தேடி வருவதால், ஈரானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் இந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

 

“ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் விலை” என்ற மோஜ்தபாவின் முழக்கம், மத்திய கிழக்கை ஒரு முழுமையான பிராந்தியப் போருக்குள் தள்ளும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. எண்ணெய் வயல்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், ஈரானின் இந்த அடுத்தகட்ட பழிவாங்கல் நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இப்தார் நிகழ்வு

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச...

இலங்கை ; டீசல் விலை 600 ரூபாய்?

ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல்...

கத்தாரின் பாரிய எரிவாயு கிடங்கு மீது ஈரான் தாக்குதல்.. மசகு எண்ணெய், எரிவாயு விலை அதிகரிப்பு…

கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது...

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...