Date:

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில ‘துருசெவண’ பகுதிக்கு அருகில் இன்று (18) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு தொகுதியினர் அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையிலும், ஏனையோர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகம் அல்லது கவனக்குறைவான ஓட்டுதலே இந்த விபத்திற்குக் காரணமா என்பது குறித்துப் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன...

வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது -ஜனாதிபதி

எங்களுக்கு வரவிருந்த 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வராது என எரிபொருள்...

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...