Date:

ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நிலவும் எரிபொருள் விநியோகப் சிக்கல்களை எதிர்கொள்வதற்காக, நாளை (17) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாத் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் 4 பிரதான குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

    Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்...

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...