தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக் கட்டுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
அலுவலக நேரங்கள் மற்றும் பாடசாலை நேரங்கள் போன்ற பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மிக அவசியமான காலப்பகுதிகளில் மாத்திரம் பஸ் சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க வேண்டும்.
பகல் வேளைகளில் பயணிகளின் வருகை குறைவாகக் காணப்படும் அத்தியாவசியமற்ற பயணங்களை நான்கில் ஒரு பங்காக (25%) குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேவையற்ற நேரங்களில் பஸ்களை இயக்குவதைக் குறைப்பதன் மூலம் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்
Date:
“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”






