Date:

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது.

 

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே நேற்று 16 ஆவது நாளாக போர் நீடித்​தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசு​வில் அந்த நாட்​டின் இராணுவ தளம் உள்​ளது. அங்கு ஏவு​கணை​கள் சேமித்து வைக்கப்பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதைத் தொடர்ந்து சிராசு​வில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று தாக்​குதல் நடத்தின.

 

இதில் ஈரான் இராணுவ தளங்​கள் கடுமை​யாக சேதமடைந்​தன. இதே​போல ஈரானின் இஸ்​ப​கானில் உள்ள இராணுவ முகாம்​களை குறி​வைத்​தும் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான் வழி தாக்​குதலை நடத்​தின. ஈரான் முழு​வதும் இது​வரை 1,400 இற்கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது

 

ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி, டுபாய் பகு​தி​களில் அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் செயல்​படு​கின்​றன. இந்த தளங்​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை​களை வீசி​யது. மேலும் டுபாய் மெரினா கடற்​கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​துச் சிதறின.

 

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் இராணுவம் நேற்று முன்​தினம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தியது. இந்த தாக்​குதலால் துறை​முகத்தை அண்மித்துள்ள எண்ணெய் கிடங்​கு​கள் தீப்​பிடித்து எரி​கின்​றன. அங்கு 2 ஆவது நாளாக நேற்​றும் எண்​ணெய் கிடங்​கு​கள் கொழுந்​து​விட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

 

குவைத்​தில் அமெரிக்க விமானப் படைத் தளம் செயல்​படு​கிறது. அந்த படைத்​தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று 2 ஏவுகணை​களை வீசி​யது. மேலும் குவைத் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மீது ஈரான் இராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் விமான நிலை​யத்​தின் ரேடார் கட்​டமைப்பு சேதமடைந்​தது. சவூதி அரேபி​யா​வின் அல் கார்ஜ் நகரில் அமெரிக்க விமானப் படைத்தளம் செயல்​படு​கிறது. அந்த தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று 6 ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் 2 ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தது. ஈரானின் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் நடு​வானில் அழிக்கப்​பட்​டன.

 

கட்டார் தலைநகர் டோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்​தளம், பஹ்ரைன் நாட்​டின் ஷேக் இசா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், அந்த நாட்​டின் மனா​மா​வில் உள்ள அமெரிக்க கடற்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. அவை நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களை குறி​வைத்​தும் ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதிய நாட்டிய கலையரங்கம் திறந்து வைப்பு

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகன்ஸ் 87/88 சாதாரண...

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...