அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி இன்று பாடசாலை கற்றல் நடவடிக்கையின் பின்னர் நுவரெலியா பிரதான தாபால் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்
சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் சம்பள உயர்வை கேட்கவில்லை எமது சம்பளத்தையே கேட்கிறோம், பிள்ளைகளின் கல்வியை சிதைக்காதே கல்வியை உறுதிப்படுத்து, ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை, இலங்கை கல்வியை இராணுவ மயமாக்காதே, இருபத்து நான்கு வருட ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வினை வழங்கு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் இடம்பெற்றது.
இவ் பேரணி நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டு லோசன் வீதி ஊடாக சென்று மீண்டும் நுவரெலியா பொது பேருந்து தரிப்பிடத்திற்கு வந்தடைந்தது. இதன் போது பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் அதிபர்,ஆசிரியர்கள் தொழிற்சங்கம் முன்வைத்துள்ள வேதனமுரண்பாட்டை தீர்ப்பதற்க்கான கோரிக்கைகளுக்கு அரசு நியாயமான உரிய தீர்மாதத்தை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அழுத்தம் தெரிவித்து இவ் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
-டி. சந்ரு செ.திவாகரன்-