ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (12) கைது செய்யப்பட்டார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.
இந்நிலையில் அவரிடம் 7 மணிநேரத்திற்கு அதிக காலம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






