இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஒரோட் ராபின்’ மின் நிலையம் மீது ஈரான் இன்று (10) கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
2,590 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்த நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இஸ்ரேலின் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இந்தத் தாக்குதல் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இந்தத் தாக்குதலை இஸ்ரேலியத் தூதரகம் மறுத்துள்ளதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், டெல் அவிவ் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதை அங்கிருந்து வரும் நேரடித் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
#CFNews






