யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






