Date:

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவ கமாண்​டர் அட்​மிரல் பிராட் கூபர் , பாதுகாப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் ஆகியோர் புளோரி​டா​வில் நேற்று அளித்த பேட்​டி​யில், ஈரான் கடற்​படையை ஒட்டு மொத்​த​மாக அழிக்​கும் நடவடிக்​கை​யில் அமெரிக்க படைகள் ஈடு​பட்​டுள்​ளன.

 

ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்​கப்​பலை நேற்று தகர்த்​தோம். அது தற்​போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா – இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 30 இற்​கும் மேற்​பட்ட ஈரான் போர்க்​கப்​பல்​கள் மூழ்​கடிக்​கப்​பட்​டுள்​ளன.

 

கடந்த 72 மணி நேரத்​தில், ஈரானின் சுமார் 200 இலக்​கு​கள் மீது அமெரிக்க படைகள் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளன. பூமிக்கு அடி​யில் ஈரான் அமைத்​துள்ள ஏவு​கணை தளங்கள் மீது, அமெரிக்​கா​வின் பி-2 குண்டு வீச்சு விமானங்​கள் 2,000 பவுண்ட் எடை​யுள்ள பல குண்​டு​களை போட்​டுள்​ளன.

இதன் காரண​மாக கடந்த 24 மணி நேரத்​தில் ஈரானின் ஏவுகணைத் தாக்​குதல் 90 சதவீதம் குறைந்துள்​ளது, ட்ரோன் தாக்​குதல் 83 சதவீதம் குறைந்​துள்​ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்​குதல் தீவிரமடையும் என்று கூறினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச...

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...