Date:

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா. கடும் கண்டனம்

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக் குழு, அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஈரானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச உண்மை கண்டறியும் குழு  வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.

“இந்தத் தாக்குதல்கள்… எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராகப் பலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணானவையாகும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களை மதித்துச் செயற்படுவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என இந்த விசாரணைக் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை...

அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்கு...

இலங்கை கடற்பரப்புக்கு வெளியே ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கி தாக்குதல்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது...

விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் காலி கராப்பிட்டியவிற்கு

ஈரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய...