Date:

வெளிநாட்டு மாணவர்களை வௌியேறுமாறு ஈரான் அறிவுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் வான்​வழி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் போர் பதற்​றம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில், ஈரான் கல்வி நிலை​யங்​களில் படிக்​கும் வெளி​நாட்டு மாணவர்​கள் நில எல்​லைகள் வழி​யாக வெளி​யேற அனு​ம​திக்​கப்​படு​வார்​கள் என ஈரான் அரசு அறி​வித்​துள்​ளது.

மேலும், மாணவர்​கள் தங்​கள் பருவ இறு​தித் தேர்​வு​களை பின்​னர் எழுத​வும், முனை​வர் பட்ட ஆய்​வறிக்​கையை பின்​னர் சமர்ப்பிக்கவும் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள், அதற்​கான தேதி​கள் பிறகு அறிவிக்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஈரானில் பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் பொது நிறு​வனங்​கள் தற்காலிகமாக மூடப்​பட்​டுள்​ளன. ஈரான் வான்​வெளி சர்​வ​தேச விமானங்​களுக்கு மூடப்​பட்​டுள்​ளது.

ஈரானை விட்டு வெளி​யேறு​மாறு இந்​திய மாணவர்​களை அங்குள்ள இந்​திய தூதரகம் தொடர்ந்து கேட்​டுக்​கொண்​டுள்ளது.

எனினும், வான்​வெளி மூடப்​பட்​டது உள்​ளிட்ட பிற சவால்​கள் வெளியேறும் முயற்​சியை சிக்​கலாக்​கி​யுள்​ளன. டெஹ்​ரான், உர்மியா மற்​றும் பிற பிராந்​தி​யங்​களில் உள்ள மாணவர்​களுக்கு மருத்​து​வம் உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய சேவை​கள் பெறு​வ​தில் சிரமம் எற்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்

ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்...

லெபனான் எல்லைக்குள் புதிய முற்றுகை!

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக...

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்து அரசின் நிலைப்பாட்டை கூறிய ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய...

ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கிய ஈரான்

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்...