மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து கவலை கொண்டுள்ளேன். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இத்தகையதொரு பாரிய நிச்சயமற்ற மற்றும் அபாயகரமான தருணத்தில், அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் மிக உயரிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்களின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது பாரிய பொறுப்பாகும்.
எனவே, அங்குள்ள தூதரகங்கள் ஊடாகத் தேவையான அனைத்து இராஜதந்திர நகர்வுகளையும், அவசர காலங்களில் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து மற்றும் தளவாட வசதிகளையும் அரசாங்கம் இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆரம்பித்துள்ள பிராந்திய மோதல் தொடர்பில் தனது x தள பதிவிலே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
போலவே எந்தவொரு அவசர நிலையையும் கையாள்வதற்கான விசேட பாதுகாப்பு பொறிமுறைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். இக்கட்டான இந்தச் சூழலில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல், வெளிநாடுகளில் உள்ள நமது நாட்டுப் பிரஜைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டினார்.






