Date:

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து!

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில், குறித்த விமானத்தின் இயந்திரம் தீப்பற்றி எரிந்தவாறு கீழே விழும் காட்சி காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அதில் இருந்த விமானி விமானத்திலிருந்து குதித்துப் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவருக்கு உதவியுள்ளனர். எனினும், விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு இயக்குநரின் நிலைமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலா அல்லது இயந்திரக் கோளாறா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 3 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking நெதன்யாகு அலுவலகத்தில் தாக்குதல்! நெதன்யாகு கதி என்ன?

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன்...

இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம்...

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் -சஜித் பிரேமதாச

மோதல்கள் மற்றும் மிக வேகமாகத் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து...

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – ரணில்

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று...