Date:

ஈரான் தாக்குதலில் மூன்று அமெரிக்கப் படையினர் பலி

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

 

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அமெரிக்கத் தரப்பில் பதிவான முதலாவது உயிரிழப்புகள் இவை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது மேலும் ஐந்து படைவீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக அந்நாட்டு இராணுவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அமெரிக்க இராணுவ மரபுகளின்படி, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு 24 மணிநேரம் கழியும்தொடரே பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஈரானுக்கு எதிரான இந்த இராணுவ நடவடிக்கையை அறிவித்திருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார். “அமெரிக்க வீரர்களின் உயிர்கள் பறிபோகலாம், போரின் போது இத்தகைய உயிரிழப்புகள் சாதாரணமானவை” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து...

எரிபொருள் விலை குறித்து OPEC+ அமைப்பு திடீர் தீர்மானம்!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதிலடிகளால் மத்திய கிழக்கில்...

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி காலமானதைத் தொடர்ந்து, நாட்டின்...

எரிபொருளை சேமிக்கத் தொடங்கினால் மீண்டும் QR

பொதுமக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR...