Date:

பாகிஸ்தானின், US தூதரகம் முற்றுகை ; பொலிஸாருடன் மோதல்

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஞாயிற்றுக்கிழமை (01) அன்று, பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எம்.டி. கான் வீதியில் (MT Khan Road) உள்ள தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், தூதரக வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதுடன் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதுடன், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றுள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வன்முறையைத் தவிர்க்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் ரேஞ்சர்ஸ் (Rangers) படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவூதியிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மத்திய கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் போர் சூழலை கருத்தில் கொண்டு,...

தெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய இலக்குகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத்...

உலகை அச்சுறுத்தும் தாக்குதல்: ஐ.நா. எச்சரிக்கை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல், உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் கட்டுப்படுத்த...

“ஈரான் இன்று தாக்கினால், இதுவரை பார்த்திராத தாக்குதல் நடக்கும்”

முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தப் போவதாக...