Date:

இஸ்ரேல் – அமெரிக்க தாக்குதல் – ஈரானில் 133 பேர் பலி

ஈரான் மீது சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழுவான மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்கள் ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும் என குறிப்பிடப்படுகின்றது.

18 மாகாணங்களில் சுமார் 58 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் தலைநகர் தெஹ்ரானிலேயே அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ உயிரிழப்புகள், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் கடுமையான இணையத் துண்டிப்புகள் குறித்தும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதி

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின்...

பஹ்ரைன், குவைட்டில் உள்ள இலங்கையர்கள் கவனத்திற்கு

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும், மத்திய கிழக்கில்...

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில்...

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...