Date:

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...