Date:

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ளன.

இன்று (22) பிற்பகல் மத்திய மாகாணத்தில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள போதிலும், இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியைப் பார்வையிடுவதற்காக ரசிகர்கள் தற்போதே பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை ஆறு தடவைகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐந்து தடவைகள் இங்கிலாந்து அணியே வெற்றியைத் தனதாக்கியுள்ளது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற போட்டியில் மாத்திரமே இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய, இங்கிலாந்து அணிக்கு எதிராக இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 14 வருடங்களாகத் தொடரும் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடனேயே இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி!

இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...