Date:

உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்: நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

குரூப் 2-வில் நடைபெறும் இத்தொடரின் 41-வது போட்டியான இதில், நாணய சுழற்சி வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார். அதன்படி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசவுள்ளது.

முதல் சுற்றில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றிகளுடன் தத்தமது பிரிவுகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை வலுப்படுத்த இரு அணிகளுக்கும் இந்த முதல் சூப்பர் 8 வெற்றி மிகவும் அவசியமானதாகும். இன்று இரவு 7:00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சோமாவதிய புனித பூமி நீரில் மூழ்கியது

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு...

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க...