Date:

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்த புதிய வரித் திட்டத்தை வெளியிட்டார்.

இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய டிரம்ப், வரித் தொகையைத் திரும்பப் பெறுவது சட்டப் போராட்டமின்றி நடக்காது என்று சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுபறியாக இருக்கும் என்றும், இதை தான் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதாக அவர் வாதிடும் இந்த இறக்குமதி வரிகளைத் தொடர, பிற சட்டங்களை நாடுவேன் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க...

இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும்...

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ...