Date:

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கிய கொள்கைத்தூண் ஒன்றை தகர்த்துள்ளது.

 

வரிகளை விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அல்ல, மாறாக நாடாளுமன்றத்திற்கே உரியது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

 

1977 ஆம் ஆண்டின் அவசரகால அதிகாரச் சட்டம் இவ்வாறான பாரிய வரிகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம், கடந்த ஒரு வருடத்தில் வசூலிக்கப்பட்ட பில்லியன் கணக்கான டொலர் வரிப்பணத்தை அரசாங்கம் மீண்டும் வர்த்தகர்களுக்கே வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதனை ஒரு பாரிய குழப்பம் என நீதியரசர் பிரட் கவனாக் எச்சரித்துள்ளார்.

மற்ற நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது ட்ரம்ப் பயன்படுத்தி வந்த வரி அச்சுறுத்தல் எனும் ஆயுதம் இப்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகள் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வழிவகுக்கும்.

குடிவரவு மற்றும் மத்திய அரசாங்க மறுசீரமைப்பு போன்ற விடயங்களில் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளுக்கு இதுவரை நீதிமன்றம் ஓரளவு இடமளித்து வந்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரப் பயன்பாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும்...

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ...