Date:

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...

இன்று வானில் நிகழும் அதிசயம்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது....