Date:

இன்று வானில் நிகழும் அதிசயம்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதியைச் சந்திரன் மறைத்து, சுற்றிலும் ஒரு “நெருப்பு வளையம்” போன்ற ஒளி வட்டத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே இதை வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். பொதுவாகக் கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியாகப் பல காரணங்களைக் குறிப்பிடுவார்கள். அதேபோல அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கங்கள் இருக்கிறது.

 

பொதுவாகச் சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. வழக்கமான சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்கும். அதேநேரம் இந்த நெருப்பு சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் மறைக்கும். இதனால் சூரியனின் விளிம்புகள் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது நெருப்பு வளையம் போலத் தோன்றும்.

இது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அரிய நிகழ்வாகக் கருதப்படும் இது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை உன்னிப்பாக ஆய்வு செய்யவும் ஒரு முக்கிய வாய்ப்பை ஆய்வாளர்களுக்கு வழங்குகிறது. 0.963 தீவிரம் கொண்ட இந்த வளையச் சூரிய கிரகணத்தில், சந்திரன் சிறியதாகத் தோன்றுவதால், சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வளையம் தெளிவாகத் தெரியும்.

இந்த கிரகணம் பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும். கிரகணத்தின் உச்சக்கட்டம் மாலை 5.42 மணிக்குத் தொடங்கி 5 நிமிடங்கள் வரை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இந்தக் கிரகணம் இலங்கை, இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை.. தென் அமெரிக்கா, தெற்கு ஆபிரிக்கா மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் மட்டுமே இந்த வளையக் கிரகணம் தெரியும்.

இது போன்ற சூரிய கிரகணங்கள் சூரியனின் பிரகாசமான பகுதியை இயற்கையாகவே மறைக்கும். இதனால் எப்போதும் மிகப் பிரகாசமாக இருக்கும் கரோனா மங்கலாகத் தெரியும். இது சூரியன் குறித்த ஆய்வுக்கு மிகச் சரியான வாய்ப்பை வழங்குகிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திப் பல மில்லியன் டிகிரி வெப்பமான இதன் வெளிப்புற வளிமண்டலத்தின் அமைப்பு, இயக்கவியல் மற்றும் நிறை உமிழ்வுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவை சூரிய காந்தப்புலங்கள் மற்றும் வெடிப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்றது இலங்கை

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு...