Date:

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணிகள் இன்று (16) நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்திருந்தமையே இதற்குக் காரணமாகும்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் றக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபரினால் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும்...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர...

ஐ.எம்.எப் பணிப்பாளர் இன்று நாட்டுக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று (16)...

ஐ.சி.சி தலைவர் ஜே ஷா இலங்கைக்கு வருகை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah),...