சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (I.C.C.) தலைவர் ஜே ஷா (Jay Shah), இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.
அவருடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 11 உயர் அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.






