Date:

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்திற்காக 162 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுமதித்ததன் ஊடாக, அந்தக் குற்றத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய, அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ ஆகியோர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார இந்த உத்தரவை பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...

தென்னாபிரிக்கா திரில் வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் (D) பிரிவில் இன்று (11)...

மெக்சிகோவில் அவசர நிலை; முகக்கவசம் கட்டாயம்

மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ...