தலைமை பதவியில் உள்ளவர்களின் பலவீனம் காரணமாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியில் பதவியில் இருப்பவர்களில் மாற்றம் ஏற்படவில்லை எனின் கட்சிக்கு எதிர்காலம் இருக்காது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.