Date:

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு குவைத் அரசாங்கம் இம்முறை 25 தொன் ஈச்சம் பழங்கள் குவைத்தி பதிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் தன்னவர் ஆர்வ நிறுவனங்கள் ஊடாக ஞாயிற்றுக்கிழமை (08) அன்று வழங்கி வைக்கப்பட்டது.

 

குவைத் நாட்டின் 65 வது தேசிய தினம் திங்கட்கிழமை (09) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கொழும்பு 7 ல் உள்ள குவைத் தூதரகத்தில் வைத்து ஈச்சம் பழங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் குவைத்திலிருந்து இலங்கை வருகை தந்துள்ள அஷ்ஷேக் மன்சூர் ஜப்பார், குவைத்தின் இலங்கைக்கான தூதுவர் ஆலயத்தின் சார்ஜ் டி அபயாரும் பதில் தூதுவர் அப்துல்லாஹ் அல் முஹன்னாஸ் ஆகியோர்கள் இணைந்து 16 நிறுவனங்களின் தலைவர்களுடன் கையளிக்கப்பட்டது.

 

இவை, ஊடாக பள்ளிவாசல்கள் சமூக சேவை இயக்கங்கள் அவர்களது பிரதேச முஸ்லிம்களுக்கு வழங்கி வைக்கப்படும் என இவ் அமைப்புக்களினதும் இத் திட்டத்தின் ஒருங்கினைப்பாளர்கள் அல் ஹிமா பவுண்டேசனின் பணிப்பாளர் அஷ்ஷேக் நூருல்லாஹ் மற்றும் இஷாக் மெளலவி யும் இணைந்து தெரிவித்தார்கள்.

 

இங்கு உரையாற்றிய குவைத் பதில் தூதுவர் மேன்மை தாங்கிய அப்துல்லாஹ் அல் முஹ்ன்னாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

 

“இலங்கை – குவைத் நட்புறவின் திட்டத்தின் கீழ் குவைத் அரசாங்கம் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்வி, வீடமைப்பு மற்றும் பாதை அபிவிருத்தி என பல்வேறு திட்டங்களுக்கு இலங்கைக்கு உதவி வருகின்றது. அத்துடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கடந்த 4 தசாப்த காலங்கள் குவைத் நாட்டில் தொழில் செய்து வருகின்றனர். இலங்கை -குவைத் நட்புறவு கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக நிலவி வருகிறது.” என்றும் அவர் குறிப்பிட்aடார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...