அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர் முழுப் பகுதியையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (PoK) மற்றும் அக்சாய் சின் உள்ளிட்ட பகுதிகளுடன் இந்திய எல்லைக்குள் சேர்த்துக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடம், இந்தியா–அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக (tariff) ஒப்பந்தம் தொடர்பான விளக்கப்படமாக வெளியிடப்பட்டதாகும்,
அதில், அக்சாய் சின் பகுதியும் இந்தியப் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு நேரடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜம்மு–காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் முழுமையாக இந்திய எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ள இந்த சித்திரிப்பு, பிராந்திய விவகாரங்களில் வோஷிங்டனின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது






