10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதி வருகின்றன.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Scott Edwards அதிகபட்சமாக 37 ஓட்டங்களையும், Bas de Leede 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Salman Mirza 03 விக்கெட்டுக்களையும், Mohammad Nawaz, Abrar Ahmed, Saim Ayub ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






