Date:

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் தற்போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஊடாகப் பிரதேசச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக, அரசாங்கத்தினால் ஒரு மாணவருக்கு மொத்தம் 25,000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திறைசேரியிலிருந்து: 15,000 ரூபாவும் மற்றும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து: 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய அம்பாறை, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு தற்போது முழுமையாகக் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான குறித்த நிதியுதவியும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...