Date:

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்

இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.

எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம்.

மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

இவ்வாறான விவகாரங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பினைப் பேணிவருகின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5)...

பாராளுமன்றில் ஐஸ்: சபாநாயகர் பணிப்பு

ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற  சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை...

மஹிந்தானந்த, நளின் வழக்கு – உத்தரவு அறிவிப்பு…

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மேஜர்...