Date:

பாராளுமன்றில் ஐஸ்: சபாநாயகர் பணிப்பு

ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற  சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு  என்று  வெளியான செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன  அறிவுறுத்தினார்

பாராளுமன்றம்   வியாழக்கிழமை (05)  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போதே இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

2026.01. 11 ஆம்  திகதியன்று வெளியான   சிங்கள பத்திரிகை ஒன்று  ‘பாராளுமன்ற  சேவையாளர்கள் ஐஸ், போதைப்பொருள் பாவனை. கடும் நடவடிக்கையை முன்னெடுக்க சபாநாயகர் பணிப்பு’  என்று தலைப்பில்  செய்தி வெளியிட்டுள்ளது. இந்த  செய்தியானது  பாராளுமன்ற தத்துவங்கள் மற்றும்  சிறப்புரிமைக்கு முற்றிலும் விரோதமானது.

பாராளுமன்ற சேவையாளர்கள் குறித்து போலியான செய்திகளை வெளியிடும் போது பாராளுமன்ற கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இந்த செய்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழுவுக்கு அறிவுறுத்துகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...