Date:

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார்.

இதனிடையே, கடாபி கொல்லப்பட்டப் பின்னர் லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக கடாபியின் 2வது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2021ம் ஆண்டு அறிவித்தார். ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, லிபியாவின் சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்தார். அவரது பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டிற்குள் நேற்று மதியம் 2 மணிக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது.

அந்த கும்பல் வீட்டிற்குள் இருந்த சைப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இறையாண்மைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தருணம் ஆரம்பம் – பிரதமர்

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும்...

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் – ஜனாதிபதி

நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான...

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும்...

மீண்டும் இணையும் லசித் மாலிங்க

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்பச் சுற்றில் இலங்கை அணி...