தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்தார்.
இந்தப் போராட்டக்காரர்கள் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், தமது போராட்டத்தைச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியதைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டிருந்த சிலரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






