2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக அதிகரித்துள்ளது. இது 2025 டிசம்பர் மாதத்தில் 2.1% ஆகப் பதிவாகியிருந்தது.
2026 ஜனவரி மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 3.3% ஆக அதிகரித்துள்ளதுடன், 2025 டிசம்பர் மாதத்தில் இது 3.0% ஆகக் காணப்பட்டது.
அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 2025 டிசம்பர் மாதத்தில் 1.8% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அந்தப் பெறுமதி 1.8% ஆக மாற்றமின்றி நிலவுவதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






