Date:

கொழும்பில் இடம்பெறவுள்ள ‘சுவர்க்கத்தை நோக்கிய பாதை’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு மாநாடு

புனித அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்தில் ஒரு பாரிய ஒழுக்கவியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சுவர்க்கத்தை நோக்கிய பாதை – குர்ஆனும் அறிவியலும் (Road to the Heaven – With Qur’an and Science) எனும் விசேட மாநாடு எதிர்வரும் 2026 பெப்ரவரி 01 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மனிதாபிமான நிவாரண நிறுவனம் (Humanitarian Relief Foundation (HR Foundation) பஜ்ர் கவுன்சில் (The FAJR Council) மற்றும் கொலன்னாவ மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நாடளாவிய ரீதியிலான முன்னெடுப்பை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையில் முதன்முறையாக இத்தகைய பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இந்த மாநாடு, ஆன்மீக மறுமலர்ச்சி, தார்மீகப் பொறுப்புணர்வு மற்றும் நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையை முறையை சமூகத்தில் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மாநாட்டில் நாட்டின் புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் வளவாளர்களாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்:

  • டாக்டர் அலி பின் அப்துல் காதிர் – சவூதி அரேபியா இராச்சியம்
  • அஷ்-ஷெய்க் ஹம்ஸா வர்தக் –  டொண்ரடா, கணடா
  • அஷ்-ஷெய்க் அகார் மொஹம்மத் – தலைவர், ஜாமிஆ நளீமிய்யா
  • அஷ்-ஷெய்க் அர்க்கம் நூராமித் – பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா ((ACJU)
  • சகோதரர் நபீல் ஹம்ஸா – தலைவர், The FAJR Council

இன்றைய நவீன உலகில் தனிநபர்களும், குடும்பங்களும் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் குறித்து புனித குர்ஆனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவ்வமர்வுகள் அமையும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு 3,500 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட முழுமையாக குளிரூட்டப்பட்ட கொழும்பு சுகததாச உள்ளரங்கத்தில் நடைபெறும். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாரும் இதில் கலந்துகொள்ள முடியும் என்பதுடன், பெண்களுக்காக பிரத்தியேக அமர்வு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பதுடன், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் அசௌகரியங்களின்றி நிகழ்வில் முழுமையாக உள்வாங்கப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு காலை மற்றும் மதிய உணவு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வின் முக்கிய நோக்கங்கள்

  • அல்லாஹ்வின் வசனங்களைத் தாங்கி நிற்கும் இதயங்களைக் கௌரவித்தல்.
  • குர்ஆனின் வழிகாட்டுதலிலிருந்து விலகிய இதயங்களை மீண்டும் இணைத்தல்.
  • நாட்டிற்குச் சேவை செய்யக்கூடிய பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்குதல்.

அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறிச் செல்லும் இக்காலத்தில், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பாவனை போன்ற கவனச்சிதறல்களால் மனிதகுலம் திசைமாறி, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் வரை சென்றுள்ள நிலையில், இம்மாநாடு சமூகத்திற்கு நீண்டகால நன்மைகளை வழங்கும் அர்த்தமுள்ள நினைவூட்டல்களை முன்வைக்க முயல்கிறது.

ஆர்வமுள்ளவர்கள் உத்தியோகபூர்வ Google Form ஊடாக தமது விருப்பத்தைப் பதிவு செய்யலாம். எனினும், இது ஆசன ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தாது என்பதால், அன்றைய தினம் முன்கூட்டியே வருகை தந்து ஆசனங்களை உறுதிப்படுத்துமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நற்பண்புகள் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முன்னெடுக்கப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்வதற்கான இணைப்பு: https://forms.gle/DP59zYfqNhX9yKvx9

அர்த்தமுள்ள மற்றும் விழுமியங்கள் நிறைந்த வாழ்க்கையை நோக்கி இதயங்களை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் பங்கேற்குமாறும், இது குறித்த செய்தியைப் பொதுமக்களிடையே பரப்புமாறும் ஏற்பாட்டாளர்கள் உங்களை அழைக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத...

விமான விபத்தில் காயமடைந்த அஜித் பவார் காலமானார்

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்...

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்...