பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட, தியவன்னா ஓயாவின் இரு கரைகளிலும் “உல்லாச தீவு பொழுதுபோக்கு மையம்” (Frolic Island Recreational Hub) திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த திட்டத்திற்காக தியவன்னா ஓயாவை அண்மித்த 13.57 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒன்பது காணித் துண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அமைய, சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த ஏல நடைமுறையின் மூலம் இதற்கான முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.






