பழக்கமான மைதானங்களில் திறமையான அணிகளின் வரிசையில் இலங்கை அணியும் நுழையும் என்று அவர் நம்புகிறார்.
அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி இலங்கை போன்ற அணியைப் புறக்கணிப்பது மற்ற அணிகளுக்கு ஆபத்தானது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
“இலங்கை கடந்த காலங்களில் இருந்து அதே வீரர்களுடன்தான் இருந்து வருகிறது. அந்த திறமையான வீரர்கள் தங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.






