உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதற்தடவையாக 4,800 அமெரிக்க டொலர் எல்லையைக் கடந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,843 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு சமாந்தரமான முறையில், உள்நாட்டு தங்கத்தின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையின் புதிய தரவுகளின்படி, இன்று காலை தங்கத்தின் விலையில் 10,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதற்கமைய, இன்றைய தினம் ’22 கெரட்’ தங்கம் ஒரு பவுனின் விலை ரூ. 351,500 ஆகக் காணப்பட்டது.
இதேவேளை, நேற்று ரூ. 370,000 ஆகக் காணப்பட்ட ’24 கெரட்’ தங்கம் ஒரு பவுனின் விலை, இன்று ரூ. 380,000 வரை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







