சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது இருபதுக்கு 20 போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
குறித்த பட்டியலில் லசித் மாலிங்க 107 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், துஷ்மந்த சமீர 78 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதேவேளை ஆண்கள் டி20 வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையையும் வனிந்து ஹசரங்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






