ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 18ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஆலோசகரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜவ்பர்,சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம்,ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ். அர்ஹம் சுலைமான், மற்றும் பெற்றோர் எனப்பலர் கலந்துகொண்டனர்.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எப்.எப்.ரஸ்தா-அநுராதபுரம்,நாககுமார் சைலஜா-மாத்தளை,எம்.ஐ.எப்.ஹம்னா-கேகாலை,ஏ.ஜுமானா-கற்பிட்டி மற்றும் எச்.எப்.எப்.முப்லிஹா-பாணந்துரை ஆகியோர் புரவலரிடமிருந்து மடி கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது ஏறாவூர் அல்-முனீரா மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா முன்திரா தொகுத்த முற்போக்கு கலைஞர்களின் கலைப்பாணிகளும் கருத்துகளும் (வாதங்கள்) நூலும் வெளியிடப்பட்டது.நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் எண்பதாயிரம் ரூபா வழங்கி பெற்றுக் கொண்டார்.







