ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டமானது தன்னார்வ விருப்பமாக இருக்குமென தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையில், குறித்த திட்டத்தினூடாக ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பல்வேறு தெரிவுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் நிலுவையில் உள்ள தொகையினை முழுமையாகப் பெற்றுக்கொள்ளல், ஓய்வூதிய அடிப்படையில் நிதியைப் பெறுதல் உள்ளிட்ட விடயங்கள் இந்தத் திட்டத்தில் அடங்குகின்றன.
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.






