கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும் டிப்பர் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளனர்






