Date:

மோசமான காலநிலை | யாழ் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய அவர், இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது.

ஆனாலும், கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலு. வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9, 10 ஆம் திகதிகளில் யாழ். மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.

அத்துடன் இந்தப் பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது.

பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும்.

இதேநேரம் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே  பொத்துவிலில் இருந்து  236 கி.மீ....

’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ உடைந்து சிதறும்’

கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றினால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும் என்று டென்மார்க்...

கண்டியில் பதிவாகிய நிலநடுக்கம்!

கண்டி உடுதும்புர - தேவஹந்திய பகுதியில் இன்று (8) மாலை 5.05...

நாளை இலங்கை வழியாக ஊடறுத்துச் செல்லும் தாழமுக்கம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம்,...