Date:

பகுதி மக்கள் மீது சுமத்தப்படும் வீதி விளக்கு மின்சாரக் கட்டணம்!

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்ததாவது:

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் வீதி விளக்குகளின் ‘வோட்’ அளவைக் கணக்கிட்டு, அத்தொகையை அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடையே பகிர்ந்து, அவர்களின் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்க முயற்சிக்கப்படுகிறது.

இவ்வாறு சேர்க்கப்படும் தொகையானது, பாவனையாளரின் மின்சாரக் கட்டணப் பெறுமதியில் 2.2% இற்கு மேற்படாத ஒரு தொகையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீதி விளக்குகளைப் பராமரிக்கும் மற்றும் முகாமைத்துவம் செய்யும் அதிகாரம் தற்போது பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகள் வசமே உள்ளது. எனினும், புதிய யோசனையின் ஊடாக இந்த அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களிடமிருந்து நீக்கி, அதனை நிர்வகிக்கத் தனியானதொரு நிறுவனத்தை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லண்டனில் திறக்கப்பட்ட பலஸ்தீன தூதரகம்!

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர்...

மோசமான காலநிலை | யாழ் மாவட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..!

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும்...

வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுப்பு!

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை...

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...