களனி ரஜமஹா விகாரையின் துருது பெரஹெர காரணமாக இன்று (07) அப்பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய களனி ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் பெரஹெர, களனி சிறி சுற்றுவட்ட வீதி, பேலியகொட வீதி ஊடாக பிலபிட்டிய மயானத்திற்கு அருகில் கோணகம்பொல வீதியின் போதிராஜாராம விகாரைக்கு அருகில் வராகொட வீதிக்கு பிரவேசித்து, நுங்கமுகொட சந்தி, கல்பொருள்ள, வலன்கடை சந்தி ஊடாக விகாரை மாவத்தை வழியாக பியகம வீதிக்கு பிரவேசித்து நாவலோக்க வாஹல்கட ஊடாக நிறைவடையவுள்ளது.
எனவே, இன்று மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பெரஹெர இடம்பெறும் காலப்பகுதியில் பொதுமக்கள் பின்வரும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாற்று வீதிகள் விபரம்:
பத்தரமுல்லையிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள்: களனிமுல்ல சமிக்ஞை விளக்குக்கு அருகில் வலதுபுறமாகத் திரும்பி அம்பத்தலே வீதி ஊடாக கடுவெல வழியாக பியகமவை அடையலாம்.
பத்தரமுல்லையிலிருந்து பேலியகொட நோக்கிச் செல்லும் வாகனங்கள்: களனிமுல்ல சமிக்ஞை விளக்குக்கு அருகில் இடதுபுறமாகத் திரும்பி தொட்டலங்க வீதி ஊடாக பேலியகொடவை அடையலாம்.
பியகமவிலிருந்து பேலியகொட நோக்கிச் செல்லும் வாகனங்கள்: பட்டிவில சந்தியில் வலதுபுறமாகத் திரும்பி சப்புகஸ்கந்த, கிரிபத்கொட ஊடாகச் செல்லலாம்.
பியகமவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் வாகனங்கள்: பண்டாரவத்தை சந்தியில் இடதுபுறமாகத் திரும்பி கடுவெல, அம்பத்தலே வீதி ஊடாகச் செல்லலாம்.
பேலியகொடவிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள்: பேலியகொடவிலிருந்து கிரிபத்கொட, சப்புகஸ்கந்த ஊடாகச் செல்லலாம்.
பேலியகொடவிலிருந்து பத்தரமுல்ல நோக்கிச் செல்லும் வாகனங்கள்: தொட்டலங்க வீதி, களனிமுல்ல சமிக்ஞை விளக்கு ஊடாக பத்தரமுல்லையை அடையலாம்.
வராகொடவிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள்: பழைய கண்டி வீதி, டயர் சந்தி, கிரிபத்கொட, சப்புகஸ்கந்த ஊடாகச் செல்லலாம்.
பழைய கண்டி வீதியிலிருந்து பியகம நோக்கிச் செல்லும் வாகனங்கள்: கிரிபத்கொட, சப்புகஸ்கந்த ஊடாக பட்டிவில வீதியில் பயணிக்கலாம்.






