Date:

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக CID சென்ற அசாத் சாலி!

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, நேற்று (05.01.2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியுள்ளார்.

தனக்குச் சொந்தமான 150 மில்லியன் ரூபா பெறுமதியான காணி ஒன்றைப் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, அசாத் சாலி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று (05) சி.ஐ.டி. விடுத்திருந்த அழைப்பாணைக்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காகக் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இன்று அழைக்கப்பட்டிருந்தேன்.

இந்த நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனக்குச் சொந்தமான காணி ஒன்றைத் முறைக்கேடான முறையில் அபகரித்தமை தொடர்பிலேயே முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளேன்.

அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகி, மின்சார சபைக்குப் பொறுப்பாக இருந்த காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி...

வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான 3,000 ரூபாய் பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும்...

’டித்வா நிவாரண பணிகளை துரிதப்படுத்துக’

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மிகவும் திறமையாகவும்...

நாளை 04 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் நாளை...